நாளை ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் - கலெக்டர் திரு. கார்த்திகேயன் தகவல்
நெல்லை நவ. 17: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 8 தாலுக்காக்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் நாளை (18ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் திரு. கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பினை பார்க்கலாம்.
பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது., நெல்லை, பாளை, மானூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குனேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8 தாலுக்காக்கள் உள்ளன இந்த 8 தாலுக்கா அலுவலகங்களிலும் நாளை(18ம் தேதி) குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.
நவம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையான நாளை (18ம்தேி) நடைபெறும் குறைதீர் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பு நீக்கல் முகவரி மாற்றம் மற்நுமு் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளிகள் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்., கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியை கொண்டு செல்ல வேண்டும்.
முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலக பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணை 9342471314 ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை