காவு கேட்கும் மாடுகள் - மக்களை காக்குமா மாநகராட்சி?!
நெல்லை அக்.20: திருநெல்வேலி மாநகராட்சியின் முக்கிய பகுதியாக மேலப்பாளையம் மண்டலம் இருக்கிறது., இந்த மேலப்பாளையத்தின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்திற்கு இடையூராக மாடுகள் நின்ற வண்ணமும் படுத்த வண்ணமுமாக இருந்து விபத்திற்கு வழி வகை செய்கின்றன.
மேலப்பாளையம் சந்தை ரோடு, அம்பை ரோடு, அன்னை ஹாஜிரா கல்லூரி ரோடு, ஆஸாத் ரோடு என பொது மக்கள் போக்குவரத்திற்கு பயன் படுத்தும் அனைத்து ரோடுகளிலும் மற்றும் பெரும்பாலான தெருக்களிலும் குறிப்பாக ஹாமீம்புரம் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களிலும் மாடுகளின் தொந்தரவு கட்டுக்கடங்காமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
மாடுகள் ரோட்டில் சுற்றி திரிவதாலும் தனது தங்குமிடமாக ரோடுகளை ஆக்கிரமித்து படுத்து உறங்குவதாலும் வாகனங்கள் விபத்திற்குள்ளாவது அதிகரித்து வருகிறது, இரவு நேரங்களில் மாடுகளால் அதிக விபத்து நடக்கிறது, ஆனால் இதுகுறித்து மாநகாட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருப்பது பொது மக்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
மேலப்பாளையத்தில் மாடுகளால் அதிக அளவு உயிர் பலி ஏற்பட்ட பிறகுதான் சம்பந்தபட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?! அல்லது அப்போதும் மௌனம் சாதிக்குமா?! என்பது பொது மக்களிள் தரப்பு கேள்வியாக இருக்கிறது.
மேலப்பாளையத்தில் சாலையில் எப்படி இவ்வளவு மாடுகள் சுற்றி திரிகின்றன, இந்த மாடுகளுக்கு சொந்தக்காரர்கள் யார் யார் என்பதனை கண்டறிந்து அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து மாடுகளையும் அப்புறப்படுத்தியும், பொது மக்களின் உயிரையும் அனைத்து வாகன ஓட்டிகளின் உயிரையும் பணயம் வைக்கும் இந்த பிரச்சனைக்கு அதி விரைவாக தீர்வு ஏற்படுத்தி தர ணே்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோள்.
மாநகராட்சி நிர்வாகம் தயவு செய்து இந்த பிரச்சனைக்கு அதி விரைவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொது மக்களுடன் இணைந்து மனிதம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்..
கருத்துகள் இல்லை