தமுமுக வின் டிச.6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.! நாஞ்சில் சம்பத் சூளுரை..!
நெல்லை டிச.6 : அயோத்தியில் 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் முகமாகவும், அந்த நாளின் நினைவாகவும் வருடாவருடம் டிசம்பர் 6ம் தேதி தமுமுக சார்பில் தமிழகம் எங்கும் ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படியே இன்று (டிசம்பர் 6ம் தேதியை) முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் பாதுகாக்கக்கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் எனும் தலைப்பில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை சித்தா மருத்துவக் கல்லூரிக்கு எதிரில் ஆர்ப்பாட்ட களம் அமைக்கப்பட்டிருந்தது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்டத்தலைவர் K.S ரசூல் மைதின் அவர்கள் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக தலைமையக பிரதிநிதி வழக்கறிஞர் சம்சுத்தீன் சேட், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், CPI மாநிலக்குழு உறுப்பினர் K.G பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசுகையில் "இப்பொழுது அட்ரஸ் இல்லாமல் இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார் கும்பல் ரத யாத்திரை எனும் பெயரில் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதாரமில்லாமல் பாபர் மசூதி இடித்து தகர்க்கப்பட்டது, அந்த நாள் இந்திய மத சமய சார்பின்மைக்கு வேட்டு வைத்த நாள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாபரி மசூதியை வைத்து எப்படி சதி திட்டம் தீட்டினார்களோ அதேபோல ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார் கும்பல்களை ஆட்சி அதிகாரத்தை விட்டு தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி பெற்ற வெற்றி மசில்பவர், மணிபவர், மெசின்பவரால் கிடைத்த வெற்றி இது நியாயமான வெற்றி இல்லை தென்னிந்தியாவில் அவர்களுக்கு கிடைத்த தோல்வி பாசிசத்திற்கு மொத்தமாக கதவு சாத்தப்பட்டுள்ளது என்றும் பிஜேபி ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேன்டும் என்றும் பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, மனித நேய மக்கள் கட்சி (மமக) மாவட்ட செயலாளர் ஜாவித், மாவட்ட பொருளாளர் தேயிலை மைதின், மமக இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாசூர் ரஹ்மான் மமக வழக்கறிஞர் அணி மாநில பொருளாளர் முகம்மது உசேன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் பெஸ்ட் ரசூல் மாவட்ட துணை தலைவர் டவுண் ஜமால், மாவட்ட துணை செயலாளர்கள் கம்புக்கடை ரசூல்மைதீன், சேக்முகைதீன், அ. காஜா, ஏ.சி. பீர், வீரை நவாஸ் முன்னிலை வகித்தனர். மற்றும் தமுமுக, மமக நெல்லை மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட துணை செயலாளர் பாளை. AC செய்யது அலி நன்றி கூற ஆர்பாட்டம் சிறப்புடன் நிறைவேறியது.
கருத்துகள் இல்லை