மேலப்பாளையம் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது
மேலப்பாளையம் ஹாமீம்புரம் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது!
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் நமது 50வது வார்டுக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1முதல் 11 தெரு வரை உள்ள சாலைகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி மேடு பள்ளம் ஏற்பட்டு மிகவும் மோசமாக பல வருடங்கள் காட்சியளித்தது.
அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட தடங்கல் இல்லாமல் செல்ல முடியாத சூழல் இருந்தது, மழைக் காலங்களில் தெரு சாலையில் மழைநீர் தேங்கி மக்கள் நடமாட சிரமத்திற்கு ஆளானார்கள் இதன் காரணமாக மக்கள் பல ஆண்டுகாலமாக அவதிப்பட்டு வந்தனர்.
இந்த ஹாமீம்புரம் முழுவதும் நல்ல தரமான சாலைகள் அமைக்க வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் 50வது வார்டு கவுன்சிலர் K.S.ரசூல்மைதீன் அவர்கள் பல முறை பேசினார், இக்கோரிக்கை நிறைவேற தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்து வந்தார்.
தற்போது நமது 50 வது வார்டு கவுன்சிலர் K.S.ரசூல்மைதீன் அவர்களின் பெரும் முயற்சியால் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ஹாமீம்புரம் 1முதல் 11 தெரு வரை 2023-2024 மாநில சிறப்பு நிதியில் 11 தெருக்களுக்கும் தார் சாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று 21.9.2023 காலை முதல்பணியாக ஹாமீம்புரம் 7வது தெருவில் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இப்பணியை மாமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பணியை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய அறிவுறுத்தினார்.
இதனால் 50வது வார்டு மக்கள் தங்களுக்கு புதிய சாலை அமையப்போவதை எண்ணி மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்..
கருத்துகள் இல்லை