மேலப்பாளையம் நத்தம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் சேதம்
நெல்லை டிச.20 : நெல்லையில் பெய்த பெரு மழையால் மேலப்பாளையம் நத்தம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் சேதம் அடைந்துள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையத்திலிருந்து டவுண் பகுதியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள நத்தம் பகுதியின் தாமிரபரணி ஆற்றுப்பாலம் கிட்டத்தட்ட 75ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுப்பாலம் ஆகும். இந்த பாலம் தற்போது பெய்த மழையால் கருப்பந்துறை கரை பகுதியில் வெகுவாக சேதம் அடைந்துள்ளது.,
ஏற்கனவே பாலத்தையும் ரோட்டையும் இணைக்கும் சிமெண்ட் தளப்பகுதி சேதமடைந்து குண்டும் குழியுமாகத்தான் இருந்தது அந்த பகுதி தற்போது பெய்த கனமழையால் தாக்குப்பிடிக்க முடியாமல் முற்றிலும் சேதமடைந்து பாலத்திற்கும் ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதி நெறுங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதனால் மேலப்பாளையம் டவுண் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது,, மேலும் ஆற்றின் குறுக்கே போடப்பட்ட நீர் ஏற்றும் குழாயும் அதற்கு அமைக்கப்பட்ட ராட்சத தூண்களும் முற்றிலும் சேதமடைந்து சரிந்து உடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.,
சேதமடைந்த பாலத்தின் பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்ய வேலைகள் நடந்து வருகிறது விரைவில் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மனிதம் செய்திகளுக்காக, செய்தியாளர் மைதீன் பிச்சை)
கருத்துகள் இல்லை