மேலப்பாளையத்தில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன்
நெல்லை டிச.26; நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் கண மழை காரணமாக நிகழ்ந்த வெள்ள பாதிப்பிற்கான நிவாரண நிதியாக ரூபாய் 6000 ரேஷன் கடைகளில் ரொக்கமாக மக்களுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில்
இன்று நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நிவாரண நிதி பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது,
இந்த டோக்கனை வைத்து அந்தந்த ரேஷன் கடைகளில் ரூபாய் 6000 வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக மக்கள் கைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த டோக்கனை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று காத்திருந்து தங்களின் ரேஷன் கார்டு நம்பரை பதிவு செய்து வாங்கி சென்றனர் அதில் நிவாரண தொகையை வாங்கும் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறது அந்த தேதியில் இந்த பதிவு செய்யப்பட்ட டோக்கனை கொண்டு சென்று மக்கள் தமக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்ற ரேஷன் கடைகளில் ரூபாய் 6000 பெற்றுக்கொள்ளலாம் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை