Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மேலப்பாளையம்



திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிமேலாண்மைக் குழுவுடன் இணைந்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்..

கைப்பேசி வழியாக இணைய வழித் தேர்வு

தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வினை கைப்பேசி வழியாக இணைய வழித் தேர்வாக நடத்தப்படுகிறது., அவ்வாறு நடத்துவதால் மாணவர்களால் சரிவர கேள்விகளை புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது மேலும் மாணவர்களின் கண்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது மற்றும் எழுத்துக்களை அறிந்து எழுதும் திறனும் பாதிக்கிறது., 

மேலும் இதில் தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது ஒரே ஒரு கைப்பேசியை வைத்துக் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு எழுத வைத்தல் என்பது சிரமமாக உள்ளது எனவே இணையவழித் தேர்வு முறையை ரத்து செய்து பழைய காகித முறையையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என வழியுறுத்தி இந்த ஆர்பாட்டத்தை மாணவர்களின் பெற்றோர்கள் நடத்தினார்கள்


ஆர்பாட்டம் செய்யும் பெற்றோர்கள்


நடுநிலைப்பள்ளியாக உயர்த்துதல்

மேலும் அப்பகுதியில் அதிகமான மக்கள் வசிப்பதால் அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறிப்பிட்ட மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக உயர்த்துதல் குறித்தான கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருமாறு வழியுறுத்தியும் ஆர்ப்பாட்ம் நடைபெற்றது


பேச்சு வார்த்தை

மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் அதிகாரிகளும் மற்றும் வட்டார கல்வி அலுவலரும் அந்த பகுதி வார்டு கவுன்சிலரும் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்., அதன்படியே ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள் தங்கள் கோரிக்கைகளை வார்டு கவுன்சிலர் ரசூல் மைதீன் அவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு கோரிக்கை மனுவாக அளித்தனர், 


மனுவைப் பெற்றுக்கொள்ளும் கல்வி அதிகாரி


பின்பு அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட கல்வி அதிகாரி இந்த மனு மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் பெற்றோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி மாணவர்கள் நலன் காக்கப்படும் என உறுதிமொழியைக் கூறினார்.




அதை வார்டு கவுன்சிலர் அவர்கள் பெற்றோர்களுக்கு விளக்கிக்கூறியபின் ஆர்பாட்டத்தைக் கைவிட்டு சமாதானமாக அங்கிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்..

கருத்துகள் இல்லை