Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை - நீதிமன்றம் உத்தரவு.



பிரபல நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மற்றும் முன்னாள் எம்.பி

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 280 மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

நடிகை ஜெயப்பிரதா சென்னையிலுள்ள அண்ணாசாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட வைப்புத்தொகையான இ.எஸ்.ஐ. (ESI) பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த தொகையை தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை.

இதற்காக தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சென்னை மாவட்டம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

சிறை தண்டனை

இதனையடுத்து, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீடு கழக வழக்கறிஞர் கௌசிக் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியாக இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை