Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

மேலப்பாளையத்தில், ஆட்டோ ஓட்டுனர்கள் காவல் நிலையத்தில் புகார்..

   




அக்.25 நள்ளிரவில் மேலப்பாளையம் பகுதிகளில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் முன் டேஸ்போர்டு பெட்டியை உடைத்து பணமும் பொருட்களும் அடையாளம் தெரியாத திருடர்களால் சூறையாடப்பட்டது, 



மற்றும் அங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டி பணத்தையும், பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்


இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒன்று கூடி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பாக சம்பந்த பட்ட கயவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என முடிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் சங்க தொழிலாளர்கள் சார்பில் தலைவர் மாலிக் ஆட்டோ சேக் அவர்கள் தலைமையில் குதா, மின்னல் ஆட்டோ முஹப்பத்அலி, உல்லாசம் கமால் மற்றும் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒன்றாக இணைந்து 


மேலப்பாளையம் C2 காவல் நிலையத்தில் குற்ற பிரிவு ஆய்வாளர் திருமதி.விஜி அவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுத்து தொடர்ந்து இது போன்ற சம்பங்கள் நடக்காமல் தடுத்து ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தரக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது

மனுவை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் திருமதி. விஜி அவர்கள் உடனடியாக விரைந்து குற்றவாளிகளை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்

1 கருத்து: