மேலப்பாளையத்தில் இஸ்லாமிய புகைப்படக் கண்காட்சி
செப். 28 திருநெல்வேலி மேலப்பாளையம் பஜார் திடலில் முகம்மது நபி பிறந்த தின விழாவான மீலாது விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது., இந்த மீலாது விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி சார்பாக இன்று காலை 8.00 மணியளவில் மாணவர்களின் பாரம்பரிய சிலம்பாட்டத்துடன் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இஸ்லாமிய புகைப்படக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
இந்த புகைப்பட கண்காட்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டச் செயலாளர் ஜனாப் பாட்டப்பத்து M.முகம்மது அலி அவர்கள் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு பொறியாளர் M.K.பஷீர் அகமது பிலாலி தலைமையேற்றார்.
இதில் சிறப்புமிக்க இஸ்லாமிய வரலாற்று ஆவண புகைப்படங்கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி மற்றும் மதரஸா படிக்கும் மாணவர்கள் இஸ்லாமிய வரலாறுகளை அறிந்து கொள்ளும் விதமாக முகம்மது நபி அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் புகைப்படங்கள் முதல் அனைத்து வரலாற்று புகைப்படங்களும் நல் ஒழுக்க இஸ்லாமிய வாசகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பார்க்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதில் சிலம்பாட்ட பள்ளி மாணவர்களின் பாரம்பரிய சிலம்பாட்டம் நடைபெற்றது அதை அனைவரும் கண்டுகளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவு கூட்டமும் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை