மேலப்பாளையத்தில் மாணவர்கள் சமய நல்லிணக்க ஊர்வலம்
அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி சார்பாக மேலப்பாளையம் அம்பை ரோடு V.S.T. பள்ளிவாசல் முன்பிருந்தும் வாய்க்கால் பாலம் தெரு இஸ்மாயில் தங்கள் தைக்கா அருகிலிருந்தும் அனைத்து அரபி மதரஸா மாணவர்கள் மீலாதுந் நபி சமய நல்லிணக்க ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏராளமான அரபி மதரஸா மாணவ மாணவியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு இரண்டு தொடக்க இடங்களிலிருந்தும் பஜார் வந்தடைந்தனர். இதில் V.S.T. பள்ளிவாசல் ஊர்வலத்தை காவல்துறை துணை இயக்குனர் ஆதர்ஷ் பசேரா அவர்கள் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மாணவர்கள் சமய நல்லிணக்க வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியபடியும் முகம்மது நபியின் புகழை பாடியபடியும் ஊர்வலமாக அமைதியான முறையில் வந்தனர், மேலும் ஊர்வலத்தின் முன்பு இஸ்லாமிய பாரம்பரிய இசையான தப்ஸ் வாத்தியம் இசைத்து இஸ்லாமிய பாடல்கள் பாடியபடியும் பாரம்பரிய கலையான சிலம்பம் விளையாடியபடியும் வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.
ஊர்வலத்துடன் ஊர் பிரமுகர்கள், பெரியவர்கள், மதரஸா ஆசிரிய பெருமக்கள், திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி பொருப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஊர்வலம் முடிந்த பின்பு பஜார் திடலில் மீலாதுந் நபி கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்த கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவும் அதனைத் தொடர்ந்து சிறப்பு மீலாது விழா சொற்பொழிவும் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை