Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது


    குலசேகரன்பட்டினம் அக்15: உலக அளவில் பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது, இந்த திருவிழாவின் சிகரமான மகிஷாசூர சம்ஹாரம் வரும் 24ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. 

    புரட்டாசி மாதத்தில் வரும் 9நாட்கள் நவராத்திரி திருவிழாவாக அம்மனுக்கு புகழாரம் சூட்டும் விதமாக அம்மன் அருள் வேண்டி கொண்டாடப்பட்டு வருகிறது இதில் மகிஷாசூரனை வதம் செய்த 10ம் திருநாள் தசரா திருவிழாவாக கொண்டாப்படுகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவாக மைசூர் தசரா விழா அறியப்படுகிறது அதற்கு அடுத்தப்படியாக குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. 

    இந்த தசரா திருவிழாவில் ஆண்டுதோரும் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாடி மகிழ்வது தனிச் சிறப்பாகும், பிரசித்தி பெற்ற இக் கோவிலில் அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கேவில்களில் காண இயலாத அற்புதமாகும். 

        இக் கோவிலில் ஆண்டுதோரும் தசரா திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான தசரா 15ம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி இன்று கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகமும் தொடர்ந்து திருக்காப்பு அணிவித்தல் மற்றும் இரவு 10மணியளவில் சிம்ம வாகனத்தில் துர்கை அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற இருக்கிறது. 

    தசரா திருவிழாவையொட்டி வேடம் அணியும் பத்தர்கள் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாக இருத்தல் வேண்டும் காப்பு கட்டிய பிறகே வேடம் அணியவேண்டும் எனவும் வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும் எனவும் வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டும் உச்சரிக்க வேண்டும் என கோவில் சார்ந்த நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது. 

    வேடம் அணிபவர்கள் கட்டாயம் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியைக் குறிக்கும் கொடிகள் மற்றும் ரிப்பன்கள் கட்டி வரவோ கொண்டு வரவோ கூடாது எனவும் காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10வயதிற்கு உட்பட்வராகவும் அல்லது 50வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

    விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள் நள்ளிரவில் மகிஷாசூர சம்ஹாரம் முடிந்தபிறகு அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக் வேண்டியதில்லை. தங்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் அன்னை முத்தாரம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரிலுள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்துக் கொள்ளலாம் என்றும், கூட்ட நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை