Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் - அரசு தகவல்


மதுரை அக்15 : ஹைகோர்ட்டு மதுரை கிளையில் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்று  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேசில் என்பவர் ஹைக்கோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அந்த மனுவில் தமிழகத்தில் 31ஆயிரம் அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இத்திட்டம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோர கிராமங்களில் செயல் படும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் அமல் படுத்தவில்லை. வறுமையால் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் படிப்பைத் தொடர முடியாமல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனர், எனவே கடலோர கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தமிழக அரசின் காலை உணவுத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என இவ்வாறு கூறப்பபட்டிருந்து.


இந்த மனு நீதிபதிகள் எம். சுந்தர் மற்றும் ஆர். சக்கதிவேல் கொண்ட அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது அரசு பிலீடர் திலக் குமார் வாதத்தில் தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் 2022 செப். 15ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது., மேலும் இந்த திட்டம் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை அமல் படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்., இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை