Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாளை சிறையில் 9ஆயுள் கைதிகள் விடுதலை


113வது அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாளைங்கோட்டை சிறைச் சாலையில் இருந்த ஆயுள் தண்டனை பெற்ற 9 கைதிகள் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விடுதலை குறித்து சிறைச் சாலைகள் மற்றும் சீர் திருத்த சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

தமிழ்நாடு அரசின் ஆணையின் படி அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு பாளைங்கோட்டை மத்திய சிறைச் சாலையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த 9 பேர் நேற்று முன்தினம் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

விடுதலை செய்யப்பட்ட 9பேரும் பணகுடி காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவார்கள் இவர்கள் 9பேரும் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது இந்த கைதிகள் அனைவரும் 14ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து உள்ளனர் இதனால் தமிழக அரசு உத்தரவின்படி 9பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2ஆண்டுகளில் 344ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை