Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

மேலப்பாளையம் - திறந்து கிடக்கும் கழிவு நீர் ஓடையால் ஆபத்து

 

நெல்லை நவ: 30. திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 49வது வார்டின் ஒரு பகுதியாக இராவுத்தர் தெற்கு கீழப் புது தெரு (மஸ்ஜித் ரஹ்மான் எதிரில் ஆண்டவர் தெரு) இருக்கிறது. இந்த தெருவின் முடிவில் புலவர் தர்ஹா தொழுகை பள்ளி வாசலின் காம்பௌண்ட் சுவர் ஓராமாக இருக்கும் கழிவுநீர் ஓடை சரியான பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றத்துடன் திறந்து கிடக்கிறது இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதில் விழுந்து விபத்துகள் நேர்ந்து விடுமோ என அஞ்சும் அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது.


மேற்கண்ட கழிவு நீர் ஓடை பிரச்சனையை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து தரக் கோரியும்., குறிப்பிட்ட அந்த தெருவின் நடுவே மழை நீர் வற்றாமல் தேங்கி நிற்கிறது மழை நின்று 4நாட்கள் ஆகியும் இன்னும் நீர் வடியாமல் கொசு உற்பத்தியாகி  மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. ஊரெங்கும் மக்கள் காய்ச்சலால் அவதியுற்று வரும் நேரத்தில் மேற்கண்ட சுகாதார சீர்கேட்டினால் சம்பந்தப்பட்ட தெரு மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனவும்., 



மேலும் திடீரென சரிந்து விழும் நிலையில் ஒரு மின்கம்பம் இருக்கிறது இதற்கும் ஒரு சரியான தீர்வு வேண்டும். எனவே 49வது வார்டு உறுப்பினர் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கழிவு நீர் ஓடையை சிலாப் போட்டு சீரமைத்து தரும்படியும், தெருவின் நடுவில் தேங்கி நிற்கும் மழை நீர் வடிகாலுக்கும் தக்க நடவடிக்கை எடுத்து தெருவாசிகளை நோயிலிருந்து காக்கும் படியும் ஆண்டவர் தெரு ஊர் ஜமாத்தார்களும் மற்றும் தெரு பெண்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை