மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு, சிறந்த பள்ளி விருது.
நெல்லை நவ.16 தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் 2022-2023ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளி விருது மேலப்பாளையம் ஹாமீம்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு கிடைத்துள்ளது.
இவ்விருது கடந்த குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த அரசு விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் முன்னிலையில் ஹாமீம்புரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஜோசப் மைக்கிள் மற்றும் மூத்த ஆசிரியை திருமதி. சுமதி ஆகியோர் கைகளில் வழங்கப்பட்டது.
அதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பள்ளி மேலாண்மைக் குழுவின் சார்பாக இன்று (16-11-2023) ஹாமீம்புரம் தொடக்க பள்ளியில் வைத்து பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவின் நாயகராக திருநெல்வேலி 50வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான திரு. கே.எஸ். ரசூல் மைதீன் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை நகர் வட்டார கல்வி அலுவலர் திருமதி. தா. ஜெபரத்தினம் சுகந்தி, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாட வளமைய மேற்பார்வையாளர் (பொ) திருமதி. செண்பகா தேவி அவர்களும் 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. சா. ஆமினா அவர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் மற்றும் அனைத்து ஆசிரியர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. கே.எஸ். ரசூல் மைதீன் அவர்கள் பள்ளியின் வளர்ச்சி குறித்தும் அதற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினார்., கல்வி அலுவலர் திருமதி. தா. ஜெபரத்தினம் சுகந்தி மற்றும் திருமதி. செண்பகா தேவி அவர்கள் மாணவர்களின் ஒழுக்கம் குறித்தும் பெற்றோர்களின் கடமைகள் குறித்தும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரின் தொண்டுகள் குறித்தும் பாராட்டி பேசினார்கள்.
இடைஇடையே மாணவர்களின் நாடகம் மற்றும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது., இறுதியாக தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜோசப் மைக்கிள் ஏற்புரை வழங்க உதவி தலைமை ஆசிரியர் திரு. தொ. அருள் மரிய ஜான் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது..
கருத்துகள் இல்லை