Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

சென்னை புதிய விமான முனையம் டிசம்பரில் திறப்பு.. வசதிகள் என்னென்ன.. முழுவிபரம்

 


சென்னையில் அதிநவீன வசதியுடன் கூடிய ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையம் டிசம்பரில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமானநிலையமும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம், பழைய விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 100க்கும் அதிகமான விமானங்களை நிறுத்த முடியும். 

 பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையம் முதல் காந்தி கிராமம் வரை சாலை மார்க்கமாக போலீஸ் ஒத்திகை! ஒருங்கிணைந்த விமான முனையம் இந்நிலையில் தான் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் புதிதாக அதிநவீன வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த விமான முனையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ரூ.2,400 கோடி மதிப்பீடு இதற்காக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் முனையம் கட்டும் பணி 2018 செப்டம்பரில் துவங்கியது.

 தற்போது ஆண்டுக்கு 1.7 கோடி பேர் வந்து செல்லும் நிலையில் இந்த முனையம் பயன்பாட்டுக்கு வந்தால் 3.5 கோடி பேராக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணக்கிடப்ப்பட்டுள்ளது. இந்த முனையம் கட்டுமானப்பணி கடந்த 2018 ல் துவங்கிய நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வசதிகள் என்னென்ன? இந்த புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான நிலையம் பயன்பாட்டு வந்தால் பயணிகள் அதிக பயன்பெறுவார்கள். ஏனென்றால் இந்த விமான நிலையத்தில் பயணிகளுக்காக 10 பேக்கேஜ் கன்வேயர் பெல்ட், 38 தானியங்கு இயந்திரங்கள், 38 லிப்ட்கள், 46 நகரும் படிக்கட்டுகள், 12 வாக்கலேட்டர்கள், 100க்கும் மேற்பட்ட செக்-இன் கவுண்ட்டர்கள் கிடைக்கும். சுய சேவை கியோஸ்க்குகள், 38 லிப்ட்கள், 46 எஸ்கலேட்டர்கள், 12 வாக்கலேட்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட செக்-இன் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தில் இருந்து விமானங்களுக்கு செல்வதற்கான நேரம் மிச்சப்படும். 

கோவில்கள் போன்ற தோற்றம் மேலும் இங்கு அடுக்குமாடி கட்டங்களில் கார் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு என்பது கோவில்களுக்கு பிரசித்தி பெற்ற மாநிலமாக உள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் ஏராளமானவர்கள் கோவில்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால் இந்த முனையத்தில் நுழைவு வாசல்களில் கோவில்கள் போன்ற முன்தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரத நாட்டியத்தின் புகழை பறைசாற்றும் வகையில் பரதநாட்டிய சேலையில் உள்ள மடிப்புகளை போன்று விமான முனையத்தின் மேற்கூரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விமான நிறுவனங்களுடன் ஆலோசனை இதனால் இந்த ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் தான் சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விமான துறை அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநதிகள், பாதுகாப்பை உறுதி செய்யும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றன். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

  அடுத்த மாதம் திறப்பு இந்த வேளையில் புதிய நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் அடுத்த மாதம் கண்டிப்பாக திறக்கப்படும் எனவிமான நிறுவனங்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அப்போது அடுக்குமா வாகன நிறுத்தமும் திறக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் டிசம்பரில் சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை