தீவிரமாக பரவும் மெட்ராஸ் ஐ.. பள்ளி மாணவர்களுக்கு அதிகம் பரவுகிறது
நெல்லை மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு 100 முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக் காலங்களில் அதிகம் பரவும் நோய்களில் ஒன்று மெட்ராஸ் ஐ. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் மெட்ராஸ் ஐ பரவக்கூடும்.
தற்போது, தமிழகத்தில் அதிகளவில் மெட்ராஸ் ஐ பாதிப்புகள் பதிவாகியுள்ளது. திருநெல்வேலியில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு 100 முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை