நொடிக்கு 7ஜிபி வேகம் 5ஜி தொழில்நுட்பம்
5ஜி என்றால் என்ன?
ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும்?
5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் குறித்து தெரிந்துகொள்வோம்.
உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.
நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?
பட மூலாதாரம்,CHINA NEWS SERVICE
அந்த வகையில் பார்க்கும்போது, உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும் ஓபன்சிக்னல் என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த ரேடியோ அலைக்கற்றைகள் குறித்த ஆராய்ச்சியாளரான கதிரவன் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, "வேகம் என்று நாம் சொல்ல வருவது கம்பியில்லாத ரேடியோ தொடர்பாடலில் அலைக்கற்றையின் அகலமாகப் பார்க்கப்படுகின்றது.
இன்று புழக்கத்தில் இருக்கும் 3ஜி அல்லது 4ஜி ஆகிய தொடர்பாடல் முறைமைகள் பயன்படுத்தும் அதிர்வெண்கள் 3 கிகாவுக்கும் குறைவானவை. 5ஜியிலோ 30 கிகா வாக்கில் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளம் 5ஜி என்றால் முந்தையவை கால்வாய் நீர். அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல நாம் பார்க்கலாம்.
30 கிகா மைய அதிர்வெண்ணில் 3 கிகா வேகத்துக்கு தொடர்பாட முடிவதற்கு சமம். 3 கிகா இன்றைய அதிர்வெண்ணில் 300 மெகா வேகம் போன்றது. 10-20 மடங்கு இன்றைய வேகத்திலும் அதிகமாகத் தொடர்பாடலாம்" என்று அவர் கூறினார்.
உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது
கருத்துகள் இல்லை