திருச்செந்தூரில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் மொய் எழுதினர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் நடந்தது. விழாவின் இறுதி நாளான 7-ம் நாளான இன்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையம், உதய மார்த்தாண்ட அபிஷேகமமும் நடந்தது
இரவில் ராஜகோபுரம் முன்பு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமிமலையில் நேற்றிரவு சண்முகர் தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும் அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வும் நடைபெற்ற பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னியாகம் வளர்த்து மங்கள நாண் பூட்ட தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள் இல்லை