Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: இதுவரை 141 பேர் உயிரிழப்பு

 


குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளதாக ராஜ்கோட் காவல்துறை தலைவர் (ஐஜி) அஷோக் யாதவ் தெரிவித்துள்ளார்.


குஜராத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி சம்பவ இடத்தை பார்வையிட்டார்.


உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், விமானப் படை, ராணுவம், கடற்படை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுவரை 177க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவில் மீட்புப் பணிகளை தொடர்வது மிக கடினமாக இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இன்று காலை அருகாமை பகுதிகளில் உள்ள 200 பேர் மீட்புப் பணியில் இணைந்தனர்.


மீட்புக் குழுவினர் சிறிய படகுகளில் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆற்றின் சேறு கலந்த நீரில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடினமாக உள்ளதாக மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.


நடந்தது என்ன?

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றுக்கு மேல் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர்.


தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டு இருந்ததால் பாலத்தில் அதிகளவிலான மக்கள் இருந்தனர். இந்த பாலம் நேற்று மாலை 6.40 மணியளவில் இடிந்து விழுந்தது.


"குழந்தைகளுக்கு தீபாவளி விடுமுறை என்பதால் பாலத்தை காண பலர் சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தனர்" என சம்பவத்தை நேரில் பார்த்த சுக்ராம் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தார்.


"ஒருவர் மீது ஒருவர் என அனைவரும் கீழே விழுந்தனர். அதிக கூட்டம் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்தது," என அவர் தெரிவித்தார்.


பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.


அந்த நேரத்தில் 400 பேர் கட்டடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இது நடந்திருக்கிறது.


பாலம்

பட மூலாதாரம்,ANI

இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


பாலம் இடிந்த நேரத்தில் அங்கு சுமார் 400 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை