ஒரு வேளை உணவுக்கு ரூ.1.3 கோடி
ஒரு உணவகத்தில் ஒருவரின் டின்னர் பில்லாக இந்திய மதிப்பில் ஒரு கோடியே 30 லட்சம் செலுத்தியுள்ளார். அதில் வரி மட்டும் சுமார் ஆறரை லட்சமாம்.உலகின் மிக காஸ்ட்லியான நகரங்களில் துபாயும் ஒன்று. இங்கு லிவிங் காஸ்ட் என்பது மிக அதிகம்.
துபாயில் வாழ்க்கை காஸ்ட்லியாகத் தான் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் ஒருவர் தனது ஒருவேளை இரவு உணவுக்கு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. உண்மை தான்.
துபாயின் மர்யா தீவில் மிகவும் பிரபலமான துருக்கி உணவகம் ஒன்று உள்ளது. நுஸ்ரட் கெலேரியா எனப் பெயர் கொண்ட இந்த உணவகத்தின் உரிமையாளர் நுஸ்ரட் கோக்சே. இவர் முதலில் துபாயில் தனது உணவகத்தை திறந்த போது அவ்வளவு ஒன்றும் பிரபலமாகவில்லை. ஆனால் நுஸ்ரத் அசைவ உணவுகளை தங்கம் இழைத்த இதழ்கள் மூடி பரிமாறத் தொடங்கிய பிறகு பிரபலமாகத் தொடங்கினார்.
அவரது உணவகத்திற்கு பெரிய பெரிய முதலாளிகள் வரத் தொடங்கினர். தற்போது சால்ட் பே எனப் பெயர் பெற்ற நுஸ்ரத்தின் உணவகத்தில் சாப்பிடுவதே கௌரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் நுஸரத் தனது இன்ஸ்டாகிராமில் தனது உணவக பில் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பில்லை பார்த்தாலே நமக்கு தலை சுற்றுகிறது. ஆம்… அந்த உணவக பில் தொகை 6,15,065 திராம். இது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே முப்பது லட்சம். இதில் மதிப்பு கூட்டு வரி மட்டும் சுமார் ஆறரை லட்சம்.
தலை சுற்றுகிறதா? தரத்திற்கு எப்போதும் விலை கிடையாது என்ற குறிப்பையும் நுஸ்ரத் இந்த பில்லோடு பதிவு செய்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை