Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

சைக்கிள் கேப்பில் பாய்ந்து வந்த பாஜக அண்ணாமலை




 சென்னை: பாஜக மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராமிற்கும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் இடையில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய மோதலே ஏற்பட்டு உள்ளது. பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதலை அப்படியே படம் போட்டு காட்டி உள்ளது.

பொதுவாகவே. உட்கட்சி மோதல் என்றால் காங்கிரஸ் கட்சிதான் நினைவிற்கு வரும். சமீபத்தில் கூட மண்டை உடைக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அதே சமயம் பாஜகவில் சத்தமே இல்லாமல் இன்னொரு உட்கட்சி மோதல் நிலவி வருகிறது.பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்தே அவர் சீனியர் தலைவர்களை மதிக்கவில்லை என்ற புகார் சில சீனியர்களிடம் இருக்கிறது. முக்கியமாக வானதி சீனிவாசன் போன்றவர்களுக்கும், அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் கூட கோவையில் பந்த் நடத்தும் விவகாரத்தில் வானதி பந்த் நடத்தியே தீருவோம் என்று சொன்ன நிலையில், மாநில தலைமை பந்த் நடத்த அழைப்பே விடுக்கவில்லை என்று அண்ணாமலை பல்டி அடித்தார்இந்த நிலையில்தான் தற்போது காயத்ரி ரகுராமிற்கும் பாஜகவில் உள்ள சில தலைக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது உள்ளது. கடந்த மே மாதம் பாஜகவில் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். அண்ணாமலை, கட்சி உறுப்பினர்களை மாற்றி நடவடிக்கை எடுத்த போது அவரின் பதவி பறிக்கப்பட்டது. இதை பற்றி ட்விட்டரில் நீண்ட நாட்கள் காயத்ரி புலம்பி வந்தார். அதன்பின் ஒரு வழியாக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் அண்ணாமலைக்கும், இவருக்கும் இடையிலான மோதல் சரியாகவில்லை. இந்த நிலையில்தான் கட்சியால் தான் புறக்கணிக்கப்படுவதாக புகார் வைத்துள்ளார். முக்கியமாக காசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை