திருநெல்வேலியில் மராத்தான் ஓட்டம்
உலக இருதய தினத்தை ஒட்டி திருநெல்வேலி காவேரி மருத்துவமனை சார்பாக மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதியை உலக இருதய தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நாளில் மக்களுக்கு இதயதயத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதயத்தில் வரும் நோய்களை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் வகையில்,
திருநெல்வேலியில் பெரிய தனியார் மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய காவேரி மருத்துவமனையின் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 10கி.மி மற்றும் 5கி.மி தூரங்களுக்கு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.,
இதை நெல்லை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் துணை மேயர் அவர்களுடன் இணைந்து காவேரி மருத்துவமணை மருத்துவர்கள் கலந்து துவக்கி வைத்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் மாணாக்கர்கள் என அனைவரும் கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட தூரத்தை சிறப்பாக கடந்து தனது பங்களிப்பை செய்தனர்.
இதில் குறிப்பிட்ட இடங்களை வெற்றி கொண்ட அனைவருக்கும் பரிசுத் தொகையுடன் கூடிய பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது, மேலும் கலந்து கொண்டு ஓட்டத்தை இறுதி வரை நிறைவு செய்த அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் பல்வேறு கல்லூரிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை