கோவையில் போராட்டம் இல்லை. கோர்ட்டில் பல்டி அடித்த அண்ணாமலை.
இது குறித்து வரும் 31ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறியிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அம்மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையிடம் அனுமதி பெற்றதாக எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் பதிலளிக்கும் படியும் கேட்டுள்ளனர். அந்த வகையில் பாஜக அண்ணாமலை சார்பில், மாநில அளவில் தற்போது வரை எந்த ஒரு போராட்டமும் அறிவிக்கப்படவில்லை. மாவட்ட அளவில் தான் அழைப்பு விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இது எந்த வகையான போராட்டம் என்றும் தற்பொழுது வரை முடிவு செய்யப்படவில்லை என கூறி பல்டி அடித்தனர்.
மாவட்டம் சார்பில் போராட்டம் குறித்து அறிவிப்பு கூறி இருக்கலாம் ஆனால் நாங்கள் தற்பொழுது வரை அந்த போராட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் கூறினர். இதற்கு அடுத்தபடியாக நீதிபதிகள் கூறியதாவது, மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்து அனுமதி இன்றி போராட்டம் நடை பெற்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளனர். .
கருத்துகள் இல்லை