ரோட்டில் திரியும் மாடுகளை பிடிக்கக்கோரி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மேலப்பாளையத்தில் சமீபத்தில் ஒரு இளைஞர் உயிர் பலி ஏற்பட்டதும், ஒரு முதாட்டியின் கால் முறிந்ததும் மேலும் ஒரு இளைஞரின் கை ஒடிந்ததும் குறிப்பிடத்தக்கது., மேலும் இதுபோல பல விபத்துக்கள் நடந்தேறி மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது
விபத்துக்கள், உயிர்பலி ஏற்படுத்தும் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் மாடுகளை மேயவிடும் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரியும், மாடுகளை பிடிக்கக்கோரியும் நேற்று 29-10-2022 அன்று ஆக்கிரமிப்பில்லா மேலப்பாளையம் சார்பில் மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அப்பொழுது தலைவர் குதா, உஸ்மான், மக்தும் கனி, செய்யது , AR பாஷா, ராயல் காதர், கலிமுல்லா, ஈட்டி இஸ்மாயில், ராஜா அன்சாரி பாய், தன்டன் யூசுப், ரசாக், நாசர், ஸ்டிக்கர் காஜா ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை