துவரம் பருப்பு, கடலை எண்ணெய் விலை குறைந்தது
மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த வாரம் துவரம் பரப்பு, கடலை எண்ணெய், சீனி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளது.
அதன்படி, துவரை 100 கிலோ மூடை ரூபாய் 6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.300 விலை குறைந்து 9,500 ரூபாய் முதல் ரூ.10,900 வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.4,900 முதல் ரூ.5,100 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29,500 வரையிலும் விற்பனையானது
கருத்துகள் இல்லை