Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

ரஷியாவில் அதிகரித்து வரும் கொரோனாவல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.

 


ரஷியாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு இன்று இரண்டாவது நாளாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், ரஷியா முழுவதும் 51,699 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 9 க்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் 92 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் நாடு முழுவதும் பரவியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கானப்படுகிறது. கொரோனா தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியாவும் ஒன்றாகும். அங்கு தடுப்பூசி எடுப்பது மெதுவாக நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த 2020 க்கு பிறகு ஊரடங்கு விதிக்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை