மேலப்பாளையம் 50வது வார்டு பகுதி சபா கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு பகுதிசபா 50/3 கூட்டம் ஹாமீம்புரம் 5வது தெருவில்,
பகுதி சபா தலைவர் பெஸ்ட் ரசூல் அவர்கள் தலைமையில் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன், மாநகராட்சி உதவி நிர்வாக அலுவலர் நரசிம்மன் முன்னிலையில் இன்று காலை 10.15 மணிக்கு நடைபெற்றது.
இதில் ஜமாஅத் நிர்வாகிகள் பொதுமக்கள், பெண்கள் உள்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை