Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை

 


தமிழகத்தின் பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் மழை நீர் வடிகால் வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் இந்த பருவ மழையால் சென்னை பாதிக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 

இந் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம் மற்றும் புதுவையில் 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 7 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 8ம் தேதி இந்த பகுதிகளுக்கு மீன்ப்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேட்டுப்பாளையம் 12 சென்டிமீட்டர், வேதாரண்யம், காயல்பட்டினம் 10 செண்டிமீட்டர், பெரம்பூர், கயத்தார், சென்னை கலெக்டர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் 8 சென்டிமீட்டர். சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் 7 சென்டிமீட்டர் என்று மழை பதிவாகியுள்ளது.

இதைத் தவிர மதுரை, திருச்சி, சேலம், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, வேலூர், திருப்பூர், புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை